டெல்லி: நாடுமுழுவதும் பொது முடக்கம் கிடையாது, ஆனால்,  அனைத்து  அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும்  மே 31 வரை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த  பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும கொரோன  2வது அலை வீறுகொண்டு பரவி வருகிறது.  ஒவ்வொரு நாளும்அசுர வேகத்தில் பரவுவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்து வருவது மக்களிடையே அச்சசத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில், நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, மே 31ந்தேதி வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக  மத்திய சுகாதார உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்க வாய்ப்பில்லை என்றும், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், மத்திய சுகாதார அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை  கண்டிப்பாக பின்பற்றுமாறும், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் முறையாக இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த ஒரு வாரத்தில் 10% அல்லது அதற்கும் மேல் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்கள் அடையாளம் காண வேண்டும் எனவும், 60 சதவீதத்திற்கும் அதிகமான படுக்கை வசதி கொண்ட மாவட்டங்களை அடையாளம் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த இரு அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் மட்டும் உள்ளூர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக எடுப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட வேண்டும், அந்த பகுதிகளில் பகுதி மற்றும் முழு நேர லாக்டவுன் அமல்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.