சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்து தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையம் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நீதிபதிகளின் வாய்மொழி கருத்தால், தேர்தல்அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதியக்கூடாது என அறிவுறுத்த இந்திய தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், நீதிபதிகள் அளித்த வாய்மொழி கருத்துக்களை எதிர்த்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது எந்தவொரு வழக்கோ, புகார்களை பதிவு செய்யக்கூடாது என்பதை உறுதி செய்யும்படி இந்திய தேர்தல் ஆணையம் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தி உள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு,  அரசியல் கட்சிகள் தேர்தல் பேரணிகளை நடத்துவதை தடுக்காததற்காக இந்திய தேர்தல் ஆணையம் மீது கடுமையாக சாடியதுடன், தமிழகத்தில் கொரோனா  இரண்டாவது அலை தீவிர பரவலுக்கு   அது தேர்தல் ஆணையமே காரணம், இதனால், தேர்தல் கமிஷன்   அதிகாரிகள் மீது, கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் ஆணையத்தின் விமர்சனம் நாடு முழுவதும் பரபரப்பை  ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

இந்த நிலையில்,  தேர்தல் ஆணையம் தரப்பில், நீதிபதிகள் வாய்மொழி அளித்த தகவலை  வாபஸ் பெற வேண்டும்  என்று வலியுறுத்தி உள்ளது. நீதிபதிகளின் வாய்மொழி கருத்தானது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதுகுறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த  வேண்டும் என்று கூறியிருப்பதுடன்,  இதுதொடர்பாக தேர்தல் ஆணைய  அதிகாரிகள் மீது குற்றவியல் புகார்கள் பதிவு செய்யப்படுவதன் அடிப்படையில் எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.