இலங்கையில் மலேரியா இல்லை! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!

Must read

 
கொழும்பு:
இலங்கையை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனமான (who) அறிவித்துள்ளது.
1sri lnak
உலக சுகாதார நிறுவனமான who  வடகிழக்கு ஆசியாவின் மலேரியா இல்லாத 2வது நாடு இலங்கை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் மாலத்தீவை மலேரியா இல்லாத நாடாக அறிவித்திருந்தது.
இந்தியாவை விட 4 மடங்கு அதிகமான  மழை பெய்யும் நாடு இலங்கை. சிறிய நாடாக  இருந்தாலும் அங்கு மலேரியா நோயை பரப்பும் கொசுக்கள் கிடையாது என்பது  குறிப்பிடத்தக்கது.
இலங்கை 60 ஆண்டுகளுக்கு முன் மலேரியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  கடந்த 4 ஆண்டுகளில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொசு ஒழிப்பு மற்றும் மலேரிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்களின் வளர்ச்சி இலங்கையை மலேரியா இல்லா நாடாக உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
MALARIA
கடந்த சில மாதங்களாக பெய்துவரும் தொடர் மழையால்  இந்தியாவில் தமிழகம் உள்பட  பெரும்பாலான மாநிலங்களில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவி வரும் நிலையில், இலங்கைக்கு மலேரியா இல்லா நாடு என்ற அங்கீகாரத்தை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது பலரையும் வியப்பு அடைய செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கொசுவினால் உருவாகும்  டெங்கு போன்ற நோய்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article