நான் இறக்கவில்லை!: ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டலோன் ஜாலி போட்டோ 

Must read

sylvester
தான் இறந்ததாக பரவிய வதந்தியை மறுத்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வர்ஸ்டர் ஸ்டலோன், தனது ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் விதமாக நகைச்சுவையான படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ரோம்போ படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டலோனுக்கு தற்போது வயது 70. அவர் இறந்துவிட்டதாக சமீபத்தில் ஒரு புரளி கிளம்பியது. அதே போல இன்றும் ஒரு தகவல் பரவியது.
இதையடுத்து அவரது ரசிகர்கள் பதட்டமும் வருத்தமும் அடைந்தார்கள். அமெரிக்காவில் பலர் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்திருந்தார்கள்.
14217975_10153911713313581_1976050592_n
அதே நேரம், சில்வஸ்டர் ஸ்டலோன், தான் இறக்கவில்லை என்றும் அப்படி வலம் வரும் செய்தி வெறும் வதந்திதான் என்றும் தெரிவிததுள்ளார். தனது ஆரோக்கியத்தை நிரூபிக்கும் முகமாக, ஜாலியான ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
14217988_10153911713358581_1691801322_n
அந்த படத்தில் குத்துச்சண்டை செர்ஜி கோவலேவ்வை தனது உள்ளங்கையைக் கொண்டு தாங்கிக்கொண்டிருக்கிறார் சில்வஸ்டர் ஸ்டலோன்.
அவரது செய்தியையும், இந்த படத்தையும் பார்த்த அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article