லண்டன்:
வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் அறிவித்து உள்ளார்.
england pm
வெளிநாட்டினர் குடியேறுவது தொடர்பாக  நடைபெற்ற பொது வாக்கெடுப்பு  கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது.  பொதுவாக்கெடுப்பில்  ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர்.  இதையடுத்து அப்போதைய பிரதமர் டேவிட் கேமருன் பதவி விலகினார்.  அதை யடுத்து புதிய பிரதமராக தேரசா மே பதவி ஏற்றார்.
ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் இருந்து பெரும்பாலானவர்கள்  இங்கிலாந்தில்  குடியேறுகிறார்கள். இதன் காரணமாக உள்நாட்டு மக்களின்  வேலைவாய்ப்பு  போன்றவை வெளிநாட்டினரால் பறிக்கப்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்துதான் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதையடுத்துதான்,  வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கிலாந்தில் குடியேற  வருபவர்கள், குடியுரிமை பெறும் விவகாரம் அரசு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் தெரசா மே வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கூறியதாவது:-
நடைபெற்று முடிந்து  ஜூன் 23-ம் தேதி மக்கள் வாக்களித்தது என்பது ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்திற்குள் மக்கள் குடியேறுவதை கட்டுப்படுத்தும் காரணத்திற்காகதான். எனவே, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிறகு அந்நியர்கள் குடியுரிமை பெறுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட அமைப்பு உருவாக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
சீனாவில் நடைபெற்ற இரண்டு நாள் ஜி-20 மாநாட்டை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை மீண்டும் தெரிவித்தார்.