சென்னை: தமிழகத்தில் மே 1-ஆம் தேதி சனிக்கிழமை ஊரடங்கு அவசியமில்லை என்றும், 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஏற்கனவே அறிவக்கப்படடுள்ள முழு ஊரடங்கு அமலில் இக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருவதால், சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசுக்கு ஆலோசனை தெரிவித்தது.
இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 1ந்தேதி தொழிலாளர் தினம். அன்று கு பொது விடுமுறை என்பதால் சனிக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அன்றைய தினம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதால், முழு ஊரடங்கு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்து நாளை அறிவிக்க அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்துள்ளது.