‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சி முடிவடைந்து விட்டாலும், சர்ச்சைகள் தொடர்கதையாகி வருகிறது.

நேற்று (நவம்பர் 2) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விஜய் தொலைக்காட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார் அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மீரா மிதுன்.

என்னோட பிக் பாஸ் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட வீடியோக்களை உபயோகப்படுத்திவிட்டு, நிகழ்ச்சி முடிந்தவுடன் எந்தவொரு பதிலுமே இல்லை. விஜய் தொலைக்காட்சியினருக்கு மெசேஜ், கால் பண்ணினாலும், எந்தவித பதிலுமே இல்லை. சட்டப்படிப் போவேன் என்று சொன்னாலும் பதில் இல்லை.

பிக் பாஸ் வீட்டில் நடந்த சேரன் சாருடைய பிரச்சினையை மனித உரிமை ஆணையத்துக்கு எடுத்துச் சென்று, இந்த நிகழ்ச்சியைத் தடை செய்தால் மட்டுமே எனக்கான நியாயம் கிடைக்கும் என்றால் அதற்கும் தயாராக இருக்கிறேன்.

40 நாட்களாகிவிட்டது. நான் பெரிய நட்சத்திரம்., எங்களால் மட்டுமே உங்களுக்கு டி.ஆர்.பி வந்துள்ளது. இதனால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன்.

தமிழ் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை . ஜெயலலிதா அம்மா இருந்தவரை நாட்டில் Law & Order ஒழுங்காக இருந்தது . இப்போது இல்லை . என் முகத்தில் ஆசிட் அடிப்பேன் என கால் செய்து மிரட்டுகிறார்கள் . நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் .

இதுவரை நூறு பெண்களை மாடலிங்கில் மிஸ் தமிழ்நாடு போட்டிக்கு தயார் செய்துள்ளேன் . யாருக்காக செய்தேன் . இதுவரை தமிழ்நாட்டில் இப்படி ஒரு பெருமை இருந்ததா என சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார் .