புதுடில்லி: 2018-2019 க்கான நுகர்வோர் செலவினம் குறையவில்லை கூடியே இருக்கிறது, குறைந்துள்ளது என்று கூறிக்கொண்டிருப்பது தவறான கண்ணோட்டமாகும் என்று புள்ளி விவரத்துறை மற்றும் திட்டமிடல் அமலாக்கலுக்கான மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

மேலும், அவர் 2015-2016, 2017-2018 என அந்த வருடங்களிலும் இது உயர்ந்தே வந்திருப்பதாகவும், அரசு அறிக்கையில் எங்கும் குறைந்துள்ளது என குறிப்பிடப்படாதிருந்த போதும் அவ்வாறு கருத்து கொண்டிருப்பது தவறான கண்ணோட்டம் மட்டுமே என்றும் பதிலளித்தார்.

சி இ எஸ் அறிக்கைப் படி அத்தியாவசிய செலவினம் குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவம் குறைந்துள்ளதே எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், இந்த விஷயம் கணக்கிலெடுத்துக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது, ஆனால், இதனை சற்று அறிவுபூர்வமாக பார்த்தால் பதில் உண்டென்று கூறினார்.

ஏறத்தாழ 10 கோடி ரூபாய்க்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மன் மூலமாக 5 லட்சம் காப்பீடுகளின் மூலம் மக்களுக்கு போய் சேர்ந்துள்ளதென்றும், கல்வியைப் பொருத்த வரை கல்வி பெறுவது உரிமை என்ற வகையில் இலவசமாக கல்வி பெறுவதால் மக்கள் அதற்கு அதிகமாக செலவு செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

மத்திய அமைச்சரின் இந்த பதில்கள், காங்கிரஸ் சார்பாக ஜெய்ராம் ரமேஷ், அமைச்சர் செலவினம் குறித்து முரண்பாடான கருத்தை வழங்குவதாகவும் பொது அரங்கில் தெளிவாக செலவினம் குறைந்துள்ளதென வெட்ட வெளிச்சமாகியுள்ளதெனவும் குற்றம் சாட்டியதற்கான விளக்கமாக கூறப்பட்டதாகும்.