சென்னை:

டிகர் கமல்ஹாசன் திருடர்கள், கயவர்கள், குற்றவாளிகளுடன் கூட்டணி கிடையாது என்று சமீபத்தில் சொல்லி யிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்குபதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கமலின் இந்த கருத்துக்கு   அவருடன் கூட இருந்த நடிகை கவுதமியின் ஒப்புதல் வாக்குமூலமே சாட்சி என்று கூறினார்.

நேற்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  காவிரி மேலாண்மை வாரியம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தெளிவாக இருக்கிறது. கர்நாடகா மாநில அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இந்நிலையில் நீர்வளத்துறை செயலர் சொல்லும் கருத்து ஏற்புடையதல்ல. 6  வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீரை முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கை.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக நமது முதல்வர்  அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தெளிவான முடிவு எடுத்து இருக்கிறார். நம்முடைய உரிமையை நிலைநாட்டுவோம்.

நம்முடைய  பாராளுமன்ற உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்… இதில்   எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்று கூறினார்.

மேலும், டிடிவிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, அ.தி.மு.க. பெயரை டி.டி.வி.தினகரன் பயன்படுத்த விடமாட்டோம் என்றும், அதற்கு உண்டான சட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.

கமலின்,  திருடர்கள், கயவர்கள், குற்றவாளிகளுடன் கூட்டணி கிடையாது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், கமல் கருத்துக்கு அவருடன் இருந்த  நடிகை கவுதமியின் ஒப்புதல் வாக்குமூலமே சாட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.