டில்லி

ற்போது 5, 12, 18, 28 என 4 விகிதங்களில் உள்ள ஜி எஸ் டி ஒரே விகிதமாக மாற்ற இயலாது என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார்.

டில்லியில் இந்தியா – கொரியா வர்த்தக உச்ச மாநாடு நேற்று நடைபெற்றது.   இதில் மத்திய நிதித்துறை அமைச்சரான அருண் ஜெட்லி கலந்துக் கொண்டார்.   மாநாட்டில் அவர் உரையாற்றினார்.   அப்போது அவர் தனது உரையில் இந்தியாவில் அமுலாக்கப்பட்ட ஜி எஸ் டி பற்றி விளக்கம் அளித்தார்.

அருண் ஜெட்லி, “இந்தியா முழுவது 5, 12, 18, 28 என 4 விகிதங்களில் ஜி எஸ் டி உள்ளது.    இதை ஒரே விகிதமாக மாற்றி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.   ஆனல் இதற்கு தற்போது வாய்ப்பில்லை.   சமூகத்தில் உள்ள வேறுபாடுகளின் காரணமாக இப்போது மாற்ற இயலாது.   அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும்.   அப்போது தான் இது சாத்தியமாகும்.” என தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் அன்னிய முதலீட்டாளர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்த அவர் இதனால் அன்னிய முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒரு பாதுகாப்பான சந்தையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.