பிறந்தநாள் விழா வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்!

Must read

சென்னை: 
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் இல்லாமல் இருப்பதால்,  இந்த வருடம் பிறந்தநாள் விழா வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கமலஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று வரும்வரை தன் பிறந்தநாள் விழாக்களை தவிர்க்குமாறு, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
kamal
வரும் நவம்பர் 7-ந்தேதி தேதி கமலஹாசனுக்கு 63வது பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளையொட்டி அவரது நற்பணி இயக்கம் சார்பில் பல்வேறு சமூக நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் ஏராளமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வதுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு எந்தவித சமூக பணிகளோ, விழாவோ வேண்டாம் என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கமலஹாசன் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த ஆண்டு தனது பிறந்த நாள் விழாக்களை தவிர்க்குமாறு, நற்பணி இயக்கத் தோழர்களுக்கும், ரசிர்களுக்கும் டுவிட்டர் மூலம் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவது நன்றாக இருக்காது என்று ரசிகர்கள், நற்பணி மன்றங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article