சென்னை:

திருவாரூர்  தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. வழக்கின் விசாரணையை பிப்ரவரி 7ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

அதுபோல உச்சநீதி மன்றத்தில் கம்யூனிஸ்டு எம்.பி. ராஜா தொடுத்த வழக்கையும் அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

கஜா புயலின் கோர தாண்டவத்துக்கு பலியான மாவட்டங்களில் ஒன்றான  திருவாரூர்  தொகு திக்கு ஜனவரி 28ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஆனால் புயல் நிவாரண பணிகள் இன்னும் முடிவடைய நிலையில்,  தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரி வருகின்றன. இது தொடர்பாக அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது  என்று கூறி உள்ளது.

விசாரனையை தொடர்ந்து,  தேர்தல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பா ணைக்குத் தடை விதிக்க முடியாது எனவும், இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக அரசை ஆலோ சித்த பின்பே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறியது. மேலும் வழக்குத் தொடர்பான அடுத்தக் கட்ட விசாரனை பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நடத்தப்படும் என அறி வித்தார். தேர்தல் தேதி ஜனவரி 28 என்பதால் அடுத்தக் கட்ட விசாரணைக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிகிறது.

துபோல உச்சநீதி மன்றத்தில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், மேல்சபை எம்.பி.யுமான டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மத்திய அரசு வெளியிட உள்ள அரசாணைக்கு தடை விதிக்க கோரியிருந்தார்.

இந்த மனுவை தாக்கல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர்  சல்மான் குர்ஷித்,  இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.  ஆனால், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள்,  ஏற்கனவே அவசரமாக விசாரிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில் மீண்டும் அவசரமாக விசாரிக்க கோருவதா? என்று கண்டித்தனர்.