சென்னை: பேரறிவாளன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக ஏசிஜே கல்லூரி அறிவித்துள்ளது. ஆனால் கடும் எதிர்ப்புகளை மீறி  பேரறிவாளன் நிகழ்ச்சியை ஆன்லைன்  நடத்த தேசிய சட்டப்பல்கலைக்கழகம்  முனைப்பு காட்டி வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக தேசிய சட்ட பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

‘தி இந்து’ குழுமத்தின் ஊடக மேம்பாட்டு அறக்கட்டளையின் கீழ் சென்னை தரமணியில் ஆசிய இதழியல் கல்லூரியின் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்-ஏசிஜே) இயங்கிவருகிறது. இந்த நிறுவனமும், டில்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைகமும் இணைந்து,   வருடாந்திர விரிவுரை நிகழ்ச்சியில்,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலைசெய்த படுபாதக கொலையாளிகளில் ஒருவரான பேரறிவாளன் ‘மறுக்கப்பட்ட நீதியும் முடிவுறாத தேடலும்’ என்ற தலைப்பில், விரிவுரை ஆற்ற போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இது தமிழக மக்களிடையே கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஏ.சி.ஜே.யில் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்-ஏசிஜே) பேரறிவாளன் பேசவிருந்த கூட்டம்  ரத்து செய்யப்பட்டு விட்டதாக அதன் நிர்வாகி  சசிகுமார் என்பவர் தெரிவித்து உள்ளார்.  ஏ.சி.ஜே. கல்லுாரி வளாகத்தில் உள்ள  எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கதை வாடகைக்கு எடுத்த  டில்லி தேசிய சட்ட பல்கலைக்கழகம் பேரறிவாளன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தது பின்னர்தான தெரிய வந்தாகவும்,  குறிப்பிட்ட நிகழ்ச்சி தொடர்பான துண்டு பிரசுரங்களில், டில்லி சட்ட பல்கலையும், எங்கள் கல்லுாரியும் இணைந்து நிகழ்ச்சியை நடத்துவது போல அச்சிடப்பட்டிருந்தது தங்களது தெரியாது, இந்த   நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததுடன்,  இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து, அரங்கம் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், திட்டமிட்டபடி 17ந்தேதி பேரறிவாளன் நிகழ்ச்சியை நடத்துவதில், தேசிய சட்ட பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் பரவின. பேரறிவாளன் நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என பலர் தரப்பில் இருந்தும் கடும் ஆட்சேபம் எழுந்துள்ள நிலையில்,  எதிர்ப்புக்களையும் மீறி, ஏற்கனவே அறிவித்தபடி, அதே நாள்; அதே நேரத்தில், ‘ஆன்லைனில்’ அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவதாக சில தகவல்கள் தெரிவித்தன. இது  ங்கிரசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ராஜீவ் காந்தி வழக்கு குற்றவாளி பேரறிவாளனின் விரிவுரையை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது, “எதிர்பாராத சூழ்நிலைகளால் P39A இன் குற்றவியல் சட்டத்தின் 5வது ஆண்டு விரிவுரை (2022) ரத்து செய்யப்பட்டது” ஏனு  டெல்லி என்.எல்.யு. அறிவித்து உள்ளது.

நாட்டின் உயர்ந்த பதவி வகித்த முன்னாள் பிரதமர் ஒருவரின் கொலைக்கு பயங்கரவாதிகளுடன் இணைந்து செயலாற்றிய குற்றவாளியை உச்சநீதிமன்றம் தனது மேதாவிதனத்தை நிரூபிக்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நாட்டின் பிரதரை கொலை செய்தவனை உடனே தூக்கிலிடுவதற்கு பதிலாக விடுதலை செய்துள்ளது, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் மீது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தேசிய சட்ட பல்கலைக்கழகம், கொலை குற்றவாளியான பேரறிவாளனை பிரபலப்படுத்தும் வகையில், நிகழ்ச்சியை நடத்த முனைப்பு காட்டி வருவது நடுநிலையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.