புதுடெல்லி: கேரளாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குவது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த கேரள முதல்வர் பிரனாய் விஜயனுக்கு இன்ப அதிச்சி கிடைத்தது.

சாலை விரிவாக்கம் நடைபெற வேண்டுமென்றால், ஆகும் செலவினத்தில் 25% தொகையை மாநில அரசே ஏற்க வேண்டுமென மத்திய அமைச்சகத்தின் நிபந்தனையை (கேரளத்தில் நிலத்தின் விலை அதிகம் என்பதால்) மாநில அரசு ஏற்றுக்கொண்டு அனுப்பிய முன்மொழிவைப் பற்றி அமைச்சரிடம் தெரிவித்தார்.

இதனைக் கேள்விப்பட்டு அதிகாரிகளை அழைத்த நிதின் கட்கரி அவர்களைக் கடுமையாக கடிந்து கொண்டார்.

அவர் அதிகாரிகளிடம் எச்சரித்ததாவது, “இ‍ஙகே நான்தான் பாஸ். மாநில அரசு நிபந்தனைக்கு ஒத்துக்கொண்ட பிறகும் மத்திய அமைச்சகம் சார்பில் முன்மொழிவுக்கு அனுமதி கொடுக்க ஏன் தாமதம்?

எனது கடந்தகால வாழ்க்கையில் மோசமான பக்கங்களைக் கொண்டவன் நான். நான் நக்சலைட்டாக இருந்தால், உங்கள் மீது புல்டோசர்களை ஏற்றியிருப்பேன். இதுதொடர்பான அனைத்து ஆணவங்களும் இன்று மாலை 5 மணிக்குள் எனக்கு தயாராக இருக்க வேண்டும்” என்று கறாராக உத்தரவிட்டார்.

தான் சென்ற வேலை வெற்றிகரமாக முடிந்த நிலையில், மகிழ்ச்சியாக ஊர் திரும்பினார் கேரள முதல்வர்.