லக்னோ:

சின்மயானந்தா மீதான பாலியல் வழக்கு தொடர்பாக அவரும், அவரை மிரட்டி பணம் வசூலித்த குற்றச்சாட்டு தொடர்பாக, புகார் கொடுத்த சட்டக்கல்லூரி மாணவியும் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட  மாணவிக்கு ஆதரவாக உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களமிறங்கி உள்ளார்.

“பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை காப்பாற்றுவதற்காக உ.பி. மாநில பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெறும் பாதயாத்திரையில் கலந்துகொள்ளும் அவர், சட்டக்கல்லூரி மாணவிக்காக குரல் கொடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் சுக்தேவானந்த் சட்டக் கல்லூரி உள்ளது.இந்த கல்லூரி சேர்மனாக முன்னாள் அமைச்சர் சுவாம சின்மயானந்தா உள்ளார். இந்த கல்லூரியில் எல்.எல்.எம். படித்த ஒரு பெண், கடந்த மாதம் 28ம் தேதியன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பதிவிட்டார். அதில் அவர் முகத்தை மறைத்தபடி அழுது கொண்டே பேசியிருந்தார். அதில், சின்மயானந்த் தன்னை ஓராண்டாக மிரட்டியே பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டினார்.

இந்த புகாரின்மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்ற  உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு  பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, அப்போது பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் 40 வீடியோக்கள் வழங்கப்பட்டது. இது விசாரணை அதிகாரிகளின் புருவத்தை உயரச் செயத்து. இருந்தாலும், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக  சின்மயானந்த்தை கைது செய்யப்பட்டார்.  இதைத் தொடர்ந்து, பாலியல் புகார் கொடுத்த மாணவி உள்பட அவரது  உறவினர்களான சஞ்சய், சந்தீப், விக்ரம் ஆகியோரையும் கைது செய்தனர்.

இது குறித்து, உ.பி. டிஜிபி சிங் கூறுகையில், புகார் கூறிய மாணவி, தான் எடுத்த விடியோவை காட்டி, சின்மயானந்த்திடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியது தெரிய வந்தது என்றும், அதற்கு  பல ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சின்மயானந்த் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 376 சி கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது பாலியல் பலாத்காரத்தை விடக் குறைவான தண்டனையாகும்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு ஆதரவாக நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் அணிவகுப்பு யாத்திரை நடத்த முயன்றனர். அதற்கு அனுமதி அளிக்க காவல்துறை மறத்து விட்டது.

இந்த நிலையில், இன்று காந்தி பிறந்தநாள் யாத்திரை நடத்த வந்துள்ள பிரியங்கா காந்தி, சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு தனது ஆதரவு தெரிவித்து உள்ளார். “ஷாஜகான்பூரின் மகளுக்கு நீதி கோரும் குரலை ஒடுக்க உ.பி. அரசு விரும்புகிறது”  எங்கள் தொழிலாளர்கள் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? ”என்று உ.பி. கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  கூறினார்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று லக்னோவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெறுகிறது. இதற்கு பிரியங்கா காந்தி தலைமை ஏற்கிறார்.  கட்சி ஊழியர்கள் மற்றும் காந்தியின் வாரிசுகளுடங்ன  ஷஹீத் ஸ்மாரக்கிலிருந்து ஜி.பி.ஓ பூங்கா வரை பாதயாத்திரையை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, ஜி.பி.ஓ பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரியங்கா காந்தி மரியாதை செலுத்துவார்.

அதைத்தொடர்ந்து மதியம்  1:30 மணிக்கு  காங்கிரஸ் கட்சி அலுவலகம் செல்லும் அவர், அங்கு கட்சி வளர்ச்சி குறித்து தன்னார்வலர்களுடன் கலந்துரையாடுகிறார்.