மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உளள   சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 52 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 51 பேர் கொண்ட முதல் பட்டியல் வெளியான நிலையில், தற்போது 2வது பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்கு அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அங்கு, பாஜக சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கி உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  ஆகிய கட்சிகள் தலா 125 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் (செப்டம்பர்) 29ந்தேதி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில்,  மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி அசோக்சவான் போகெர் தொகுதியிலும், நிதின் ரவுட் நாக்பூர் வடக்கு தொகுதியிலும், பரினிட்டி ஷின்டே சோலாப்பூர் மத்திய தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று 52 பேர் கொண்ட 2வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் முகுல்வாஷ்னிக் பட்டியலை வெளியிட்டார். இதுவரை மொத்தம் 103 வேட்பாளர்களை காங்கிரஸ் இறுதி செய்துள்ளது.

அக்டோபர் 21 ம் தேதி சட்டமன்ற தேர்தல்வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24 ம் தேதி நடைபெறும்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 4ந்தேதி.‘