கராச்சி: ஐஎம்எஃப்(சர்வதேச நாணய நிதியம்) அமைப்பிடம் பாகிஸ்தான் அரசு பெறுகின்ற கடைசிக் கடன் இதுவாகத்தான் இருக்குமெனவும், இனிமேல் ஐஎம்எஃப் அமைப்பை நாட வேண்டியத் தேவை பாகிஸ்தானுக்கு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஸ்டேட் வங்கி ஆளுநர் ரெஸா பக்கீர்.

ஐஎம்எஃப் அமைப்புடன் ஒப்புக்கொண்ட செயல்திட்டத்தின்படி, தற்போது பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் ‍அதன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரிதும் உதவிகரமாய் உள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் தனது சொந்தக் காலில் நிற்கும் என்றார் அவர்.

எங்களின் இலக்கு அன்னிய செலாவணியை அதிகரிப்பதுதான். எனவே, அதன்மூலம் ஐஎம்எஃப் அமைப்பிடம் திரும்பச் செல்லும் நிலை ஏற்படாது என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தான் மீண்டும் கடனுக்காக ஐஎம்எஃப் அமைப்பை நாடாது என்பதை உறுதியாக கூற இயலுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அதிகளவு சேமிப்பை பராமரிப்பதுதான் முதன்மைக் காரணியாக உள்ளது” என்றார்.