டில்லி

டெஸ்லா நிறுவனம் சீனாவில் உற்பத்தி ஆகும் வாகனங்களை இந்தியாவில் விற்க வேண்டாம் என நிதின் கட்கரி கூறி உள்ளார்.

நாடெங்கும் தற்போது மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.   தற்போது மாசு அதிகரிப்பில் இந்தியா முன்னணியில் உள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குப் பதிலாகப் பலரும் மின்சார வாகனங்களை விரும்ப தொடங்கி உள்ளனர்.   மத்திய அரசு மின்சார வாகனங்கள் உருவாக்குவோருக்கு ஊக்கம் அளித்து வருகிறது.

இது குறித்தி செய்தியாளர்களிடம் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ”நான் டெஸ்லா நிறுவனத்திடம் இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு பலமுறை கேட்டுக் கொண்டுள்ளேன்.  அத்துடன்  அதற்காக மத்திய அரசு ஆதரவு மற்றும் சலுகைகளை அளிக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளேன்.

அத்துடன் சீனாவில் உற்பத்தியாகும் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் டெஸ்லா நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.  மாறாக இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் எனத் தெரிவித்துள்ளேன்.   நான் இதனால் டாட்ட நிறுவன மின்சார வாகனத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது” எனக் கூறி உள்ளார்.