டில்லி

ன்னும் ஓராண்டில் நேரடி சுங்கச்சாவடிகள் முழுவதுமாக அகற்றப்பட்டு ஜிபிஎஸ் மூலம் சுங்கக்  கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் ஃபாஸ்ட்டாக் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.  கடந்த பிப்ரவரி 15 முதல் இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  இந்த வசதியால் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசு தெரிவித்தது.   தற்போது நடந்து வரும் நிதிநிலை அறிக்கை 2ஆம் கட கூட்டத் தொடரில் இது குறித்து கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளித்த மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, “விரைவில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் ரத்து செய்யும் திட்டத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. தற்போது 93 சதவீத வாகனங்கள் பாஸ்டேக்கை பயன்படுத்துகின்றனர். அதே வேளையில் மீதமுள்ள 7 சதவீத வாகனங்கள் இரட்டை கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

இதற்கு முந்தைய அரசு நகரத்திற்கு அருகில் சுங்கச்சாவடிகள் அமைத்தன.   இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. எனவே ஒரு வருடத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து சுங்கக் கட்டணச் சாவடிகளும் அகற்றப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.  சுங்கச்சாவடிகளில் நேரடியாகக் கட்டணம் வசூலிக்கும் முறை ஓராண்டுக்குள் நீக்கப்படும்.

சுங்கக் கட்டணம் ஜிபிஎஸ் மூலம் வசூலிக்கப்படும். இதனால் வாகனங்கள் தடையின்றி செல்லலாம்.   நெடுஞ்சாலைகளின் நுழைவு பகுதி மற்றும் வெளியேறும் இடங்களில் கேமராக்கள் இருக்கும்.

ஒரு வாகனம் ஒரு குறிப்பிட்ட சாலையில் நுழைந்ததும், வெளியேறும் இடத்திலும், இரு இடங்களிலும் வாகனத்தின் படம் கேமராவில் பதிவு செய்யப்படும். அந்த அடிப்படையில், கட்டணம் வசூலிக்கப்படும்.

இதன் பிறகு யாரும் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்த வேண்டியதில்லை. புதிய வாகனங்களில் பாஸ்டேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பழைய வாகனங்களுக்கு இலவச பாஸ்டேக்குகளை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.