டில்லி:
2030ம் ஆண்டில் இந்தியாவில் பேட்டரி கார்களும், பேருந்துகள் ஓட வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டமாக மும்பை, கொல்கத்தா, டில்லியில் உள்ள வீடுகளின் சமையல் அறைகளில் மின்சார அடுப்புகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிதிஆயோக் அறிவுரை வழங்கியுள்ளது.
இதன் மூலம் ஏழைகளுக்கு இலவச காஸ் இணைப்புகளை வழங்கலாம். ஏற்கனவே மின்சார இணைப்புள்ள பகுதிகளில் மின்சார அடுப்புகளை பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வெளியிட்ட மூன்றாண்டு செயல்திட்ட அறிக்கையில் நிதிஆயோக் இவ்வாறு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 24 மணி நேரமும் போதுமான மின்சார வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நோக்கி மோடி அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இதற்கு மின்சார அடுப்பு திட்டம் என்பது இதற்கு மேலும் ஒரு சுமையாக இருக்கும். எனினும் நகரப் ப குதிகளில் ஏற்கனவே மின்சார அடுப்புகளில் சமையல் செய்யும் நடைமுறை உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது.
இந்திய உணவு முறைக்கு மின்சார சமையல் ஒத்துவரவில்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. இதற்கான பாத்திரங்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால் மைக்ரோவே ஓவன், டோஸ்டர்ஸ், கிரில்ஸ், ப்ரையர்ஸ் போன்றவற்றுக்கு மட்டுமே மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படுகிறது. தடையில்லா மின்சாரம் என்பது சில நகரப் பகுதிகளில் இன்னும் கேள்வி குறியாக தான் உள்ளது.