டில்லி

ந்த ஒரு மாநிலத்துக்கு ஜி எ/ஸ் டி அளிக்க வேண்டிய தொகை நிலுவையில் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

”மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கவில்லை, கடந்த 2010 இல் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ல் நிறைவேற்றப்பட்டது. தற்போது  மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை”

என்றார்.

மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்குப் பதில் அளித்துள்ளார்.   அவர் தனது பதிலில்,

”எந்த ஒரு மாநிலத்துக்கும் ஜிஎஸ்டி-யின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை. எனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுவது முற்றிலும் தவறான தகவல். மேலும் சொல்லப் போனால் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி 3 முறை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.