2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பைப் பெற்ற இரண்டாவது நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற மோடி அரசின் கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2024 – 25க்கான செலவு ரூ.44.90 கோடி, வருவாய் ரூ.30 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சுற்றுலாத் துறையில் அன்னிய முதலீடு ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள நிதி அமைச்சர் லட்சத்தீவில் சுற்றுலா வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2014 முதல் 2023 வரை அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாகக் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவெடுக்கும் என்று கூறினார்.

மேலும், வருமான வரியில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ள அவர் ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.