நில மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரனை கைது செய்யப்பட்டதை அடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சோரனின் வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.