சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. இதை தொடர்ந்து, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடித்துள்ளார்.இதுதவிர, ‘நாடோடிகள் 2’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ மற்றும் ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் கதிர்வேலு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.சசிகுமாரின் 19-வது படமான இதில், அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

செந்தூர் ஃபிலிம்ஸ் சார்பில் டிடி. ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சசிகுமாருடன் தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ், விஜயகுமார், ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.