இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கோமாளி.

இது ஜெயம் ரவியின் 24-வது படம். ஜெயம் ரவியின் 25-வது படத்தை, லட்சுமண் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் சண்டைப் பயிற்சி இயக்குநராக ஸ்டன் சிவாவும், நடன இயக்குநராக அவருடைய மகன் கெவினும் பணிபுரியவுள்ளனர்.

இந்நிலையில்,நடிகை நிதி அகர்வால், இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.