சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமி நேரில் ஆஜராக என்ஐஏ சம்மன் அனுப்பி உள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  நடிகை வரலட்சுமி சரத்குமார் விசாரணைக்க ஆஜராக என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) சம்மன் அனுப்பி உள்ளது.

 கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில்  பலகட்ட விசாரணை மற்றும் திருச்சசி மத்திய சிறையில்  நடத்தப்பட்ட ரெய்டு  அதைத்தொடர்ந்து கடந்தவாரம் சென்னை பர்மா பஜார் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் நடத்தப்பட்டு ரெய்டுகளைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான ஆதிலிங்கம் என்பவர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டது, போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளர் என்பதும், போதைப் பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை சினிமாவில் ஆதிலிங்கம் முதலீடு செய்துள்ளது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆதிலிங்கம் குறித்த தகவல்களை திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு ஆஜராக என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது.

தற்போது ஆந்திரத்தில் படப்பிடிப்பில் இருப்பதால், உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது, அவகாசம் தேவை  என்று வரலட்சுமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர் லிங்கம் கைது! என்ஐஏ தகவல்…