கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் மார்ச் 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் குறித்த புதிய வீடியோவை என்ஐஏ வெளியிட்டுள்ளது.
#WATCH | NIA releases a video of the suspect linked to the Bengaluru's Rameshwaram Cafe blast case, seeks citizens' help in ascertaining his identity
(Video source: NIA) pic.twitter.com/QVVJfy23ZN
— ANI (@ANI) March 8, 2024
குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்த புலனாய்வு அதிகாரிகள் LED வகை வெடிகுண்டு வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மேற்கொண்ட விசாரணையில் உணவகத்தில் குண்டுவைத்து விட்டு வெளியேறிய நபர் பேருந்துகளில் மாறி மாறி பயணம் செய்தது தெரியவந்துள்ளது.
#WATCH | NIA releases a video of the suspect linked to the Bengaluru's Rameshwaram Cafe blast case, seeks citizens' help in ascertaining his identity
The agency asks citizens with relevant information to call them on their numbers – 08029510900, 8904241100 or email to… pic.twitter.com/icKkVLYqp7
— ANI (@ANI) March 8, 2024
பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ. சந்தேகத்திற்கு உரிய நபர் குறித்து தகவல் கொடுக்குமாறு அறிவித்துள்ளது.