திண்டுக்கல்: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததால், பிஎஃப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில்,  திண்டுக்கல் அருகே பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவில் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனைக்குப் பின்னர், அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று திடீரென  திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ (Popular Front of India) அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இநத் அலுவலகத்தக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் முதல் தளத்தில் என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு, கர்நாடக மாநிலத்தில் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு, பலரையும் கைது செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், தற்போது, திண்டுக்கலில் பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் 3மணி நேரம்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் சோதனையின்போது,   கட்சி அலுவலகத்தில் இருந்து முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி சென்றனர் இதனைத் தொடர்ந்து மூன்று மாடிக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.