கோவை:

லங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, தமிழகத்தின் கோவை உள்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து பலரை கைது செய்துள்ள நிலையில், இன்று கோவையில் 2 இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, கோவையில் கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர் உள்பட 8 இடங்களில் என்ஐஏ (தேசிய புலனாய்வு ஏஜன்சி) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அதையடுத்து சிலரை கைது செய்தனர்.

இதுகுறித்து டில்லியில் நடைபெற்ற தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ)  கூட்டத்தில்  பேசிய என்ஐஏ தலைவர் அலோக் மிட்டல், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, இந்தியாவில், அதிகப்பட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர்  கைது செய்யப்பட்டு இருப்பதாக கடந்த 15ந்தேதி (அக்டோபர்) கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே கோவையில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.