இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் மரணம்! ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Must read

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் மனைவி லதீபா பேகம் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியருமான காதர் மொகிதீன் மனைவி லத்தீபா பேகம். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திருச்சியில் உள்ள சுந்தரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் சிகிச்சை பலனின்றி, அவர் புதன்கிழமை காலமானார். லத்தீபாவின் உடல், திருச்சியில் உள்ள காஜா நகர் காயிதே மில்லத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

 

More articles

Latest article