கொச்சி: ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. இதையடுத்து அவரிடம் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தற்போது என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் சிவசங்கரன் இருக்கிறார். நேற்று  9 மணி நேரம்  என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில், 2-வது நாளாக  சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிவசங்கரனிடம் நடந்து வரும் விசாரணையில் கடத்தல் கும்பலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அவர் கூறியதாக தெரிகிறது. இன்றைய விசாரணையை தொடர்ந்து சிவசங்கரன் கைதாவாரா? இல்லையா என்பது தெரியவரும்.