ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பாக அறிவிக்க எங்களுக்கே உரிமை… கவர்னருக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிவாளம்…

Must read

டெல்லி:
ம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பாக அறிவிக்க எங்களுக்கே உரிமை உள்ளது என்று மாநில கவர்னர் முர்முக்கு  தலைமை தேர்தல் ஆணையம் கடிவாளம் போட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான முடிவுகரளை  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மட்டுமே அறிவிக்கும் என்று தலைமை  தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி வரையறைக்குப் பின்னர் தேர்தல் நடைபெறும் என மாநில கவர்னர் ஜி.சி.முர்மு தெரிவித்திருந்ததாலும். மேலும், தேர்தல் நடத்தப் படுவது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில்,  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்தாவது,
சமீப நாட்களாக ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்முவை மேற்கோள் காட்டி, கண்டித்துள்ள தேர்தல் ஆணையம்,  தேர்தல் நடத்தும் தேதி,  நேரம் உள்ளிட்ட அரசியல் சாசன விஷயங்கள் முற்றிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரம்புக்கு உட்பட்டது என்றும், இதை மாநில  துணைநிலை ஆளுநருக்கு நினைவூட்ட விரும்புவதாக தெரிவித்து உள்ளது.
தேர்தல் தேதியை நிர்ணயிப்பதற்கு முன்பாக, தேர்தல் நடத்தும் இடத்தின் சூழல், வானிலை, பிராந்திய, உள்ளூர் திருவிழாக்களால் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து பொருத்தமான அம்சங்களையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டே முடிவு எடுக்கும்.
தற்போதைய கொரோன தொற்றுப் பரவல் சூழ்நிலையில், தேர்தல் நடத்துவது தொடர்பாக, புதிய கோணத்தில் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தொகுதி வரையறை விஷயமும் முடிவெடுப்பதில் முக்கிய அம்சமாக இருக்கும்.
தேர்தல் தொடர்ப்க  சம்பந்தப்பட்ட அனைவருடனும் உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு, விரிவாக மதிப்பீடு செய்த பின்னரே, அவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு, தேர்தல் நடைபெறவுள்ள மாநிலத்துக்கு தேர்தல் ஆணையம் பயணம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினருடனும் விரிவான ஆலோசனைகளை நடத்தும்.
மேலும், உள்ளூர் சூழல், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னரே தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.
துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்முவின் நடவடிக்கை, தேர்தல் ஆணையத்தின் அரசியல் சாசன உரிமையில் தலையிடுவதற்கு ஒப்பானது என்பதால், தேர்தல் ஆணையம் தவிர பிற அதிகார அமைப்புகள், இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பது முறையாக இருக்கும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article