டில்லி

ர்மதை நதியில் போதுமான நீர் திறக்காததற்கு விளக்கம் கேட்டு மத்திய மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

நர்மதை நதியில் போதுமான அளவு நீர் திறக்காததால் நதியின் நீர் வளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்திடி நீர் மட்டம் ஆகியவை குறைந்துள்ளது.   இதனால் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   இங்கு ஏராளமான விளை நிலங்கள் உள்ளதால் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலந்தால் அந்த விளை நிலங்கள் பாழாகி விடும் என அஞ்சப்படுகிறது.

தற்போது சர்தார் சரோவர் அணையில் இருந்து திறக்கப்படும் 600 க்யூசெக்ஸ் அளவை 1500 க்யூசெக்ஸ் ஆக அதிகரித்தால் மட்டுமே இதற்கு தீரு காணப்படுமென கூறப்படுகிறது.   வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான ஷில்பா சோகன் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் இதை விளக்கி மனு ஒன்றை அளித்துள்ளார்.   அத்துடன் ஒவ்வொரு பருவ காலத்திலும் நர்மதை அணையில் இருந்து எத்தனை அளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை நிபுணர் குழு ஆராய்ந்து கூற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், நர்மதை நதியில் சர்தார் சரோவர் அணையில் இருந்து குறைந்த அளவு நீர் திறப்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறு மத்திய மற்றும் குஜராத் அரசுகளுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.   மேலும் இதற்கான பதிலை  வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.