எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க , இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் என்.ஜி.கே. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

கடந்த பிப்ரவரி மாதம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தின் முதல் பாடல் ஏப்ரல் 12-ம் தேதி வெளியான நிலையில் படத்தின் இசை பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மே 31-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.