மான்செஸ்டர்:

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து ஆச்சர்ய வெற்றி பெற்றது.


மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டயில் நியூசிலாந்தும் மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதின. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஆரம்பத்திலேயே நியூசிலாந்து அணி திணறியது. காட்ரெல் வீசிய முதுல் ஓவரின் முதல் பந்தில் கப்டில் ஆட்டமிழக்க, அதிர்ந்து போனது நியூசிலாந்து அணி.
இந்த அதிர்சியிலிருந்து மீள்வதற்குள் 5வது பந்தில் முன்ரோ டக் அவுட்டானார். முதல் ஓவரில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து நின்றது நியூசிலாந்து அணி.

கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி இணைந்ததும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்.

நிதானத்தை கடைபிடித்து பொறுப்பாக ஆட ஆரம்பித்தனர். இந்த ஜோடி 4 ஓவர்களில் 2 பவுண்டரி மட்டுமே அடித்தது.

முதல் 10 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே அடித்தனர். தாமஸ் பந்தில் வில்லியம்சன் பவுண்டரி அடிக்க, ஹோல்டர் பந்தை டெய்லர் பவுண்டரி அடித்தனர்.

முதல்முறையாக இப்போதுதான் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பவுலர்கள் திணற ஆரம்பித்தனர்.
நிலையான ஆட்டத்தால், இந்த ஜோடி 50 ரன்களை கடந்தது. நியூசிலாந்து 160 ரன்களை கடந்தபோது, டெய்லர் 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வில்லியம்சன் ஒரு நாள் போட்டியில் 13வது சதம் அடித்தார். இவரும் 148 ரன்களில் ஆட்டமிழந்தார். மேற்கு இந்திய தீவுகள் அணியின் பவுலர் காட்ரெல் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஷாய் ஹோப், பூரன் ஆகியோர் தலா ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹெட்மயர், கெய்ல் ஆகியோர் 50 ரன்களை எடுத்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தாலும், பொறுப்புடன் ஆடிய கார்லோஸ் பிராத்வைட் சதம் அடித்தார்.
இவர் பவுல்ட்டிடம் கேட்ச் கொடுத்து 101 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணி, 49 ஓவர்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இறுதியில் நியூசிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.

கார்லோஸ் பிராத்வைட் சதம் வீணாகிப் போனது.
நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டிராண்ட் போல்ட் 4 விக்கெட்களும், பர்குசன் 3 விக்கெட்களும்,நீஷம், ஹென்ரி மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக் காரர்களாக களம் இறங்கிய நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில், கோலின் முன்ரோ, டக் அவுட் ஆனார்க். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தொடக்க ஆட்டக் காரர்கள் இருவரும் டக்அவுட் ஆவது இது 5 முறையாகும்.

உலகக் கோப்பை போட்டியில், அதிக சதம் அடித்த கேப்டன் பட்டியலில், ஸ்டீபன் பிளமிங்குடன் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸும் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார்.