டெல்லி: சீனாவிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்த நியூஸ் கிளிக் ஊடக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அதன் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூஸ்க்ளிக் ஆசிரியர், வெளிநாட்டு நிதியுதவி தொடர்பாக சோதனையின் பின்னர் இந்தியாவில் கைது செய்யப்பட்டார். சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்திற்காக வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் சோதனைகளைத் தொடர்ந்து இணையதளத்தின் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் மற்றொரு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையதள ஊடக நிறுவனமான நியூஸ்கிளிக் சீனாவிடம் இருந்து மறைமுகமாக பணம் பெற்றக்கொண்ட இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தாக கூறப்பட்ட  குற்றச்சாட்டின் பேரில் நேற்று நியூஸ் கிளிக் அலுவலகம் மற்றும் அங்கு பணியாற்றி வந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த முக்கிய நபர்கள், அத்துடன் மார்க்சிய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிவீடு என 40க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியது.

 நியூஸ்க்ளிக்,  என்ற ஊடக நிறுவனம் கடந்த 2009ல் தொடங்கப்பட்டது.  இது, பிபிகே நியூஸ் க்ளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.  இதன் உரிமையாளர் பிரபீர் புர்கயாஸ்தா. இந்த நிறுவனம், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. இதற்கு பின்புலமாக சீனா செயல்பட்டு வந்ததாகவும்,  சீனாவிடமிருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கூறப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனம் மீது , சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையின் சிறப்பு பிரிவின் மூலம் நியூஸ்க்ளிக் அலுவலகம், செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகள் என 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை நிறைவடைந்ததை அடுத்து, நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.  அதன் ஆசிரியர் பிரபீர் புர்கயாஸ்தாவை டெல்லி காவல் துறை கைது செய்தது. நியூஸ்க்ளிக் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்கயாஸ்தாவை டெல்லி காவல் துறை கைது செய்துள்ளது. இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்,