சேலம்: சேலம் எடப்பாடி அருகே குடும்பத்தகராறில் புதுமண பெண் கிணற்றில் குதித்து தற்கொலை – மனைவியை காப்பாற்ற குதித்த கணவனும் பலியான பரிதாபம் அரங்கேறி உள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம்  அருகே மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்த அருள்முருகன் (வயது 27). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி,  அபிராமி (வயது 19) இவர்களுக்கு , கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்குள், புத்தாண்டு தினமான 31ந்தேதி இரவு திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவனுடன் கோபித்துக்கொன்று சென்ற   அபிராமி,   நள்ளிரவு 12 மணியளவில் அருகிலுள்ள விவசாயி மாணிக்கம் என்பவரது தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
மனைவியை பின்தொடர்ந்து சென்ற கணவன்,  மனைவி அபிராமி கிணற்றில் குதித்ததை கண்டு அதிர்ச்சி, அடைந்த, அவரை காப்பாற்றும் நோக்கிலும் அவரும் கிணற்றுக்குள் குதித்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக இருவரும் கிணற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் துணையுடன் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதபரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து,. வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் காப்பாற்ற முயன்ற கணவனும் பலியான சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.