திருச்சி : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு என்றும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் சுமார் 3.5 லட்சம் மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்று திருச்சி  பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய  முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா  3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று  நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உடன் ஆளுநர் ரவி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்   ஆகியோர் பட்டங்கள் பெறும் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துடன், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று திராவிடக் கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கிய பாரதிதாசன் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

மேலும், இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் கூறியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது என்றவர், திமுக ஆட்சியின் கல்விச் சாதனைகளை பட்டியலிட்டார்.

அனைவருக்கும் ஆராய்ச்சிக்கல்வி என்ற குறிக்கோளுடன் சமூகநீதி புரட்சியை கல்வித்துறையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறது. கல்வியில் சிறந்த கல்வி நிறுவனங்கள் தொடர்பான எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் இடம்பெறும். அனைவருக்கும் ஆரம்பக்கல்வி, கல்லூரிக்கல்வி, ஆராய்ச்சிக்கல்வி கிடைப்பதை உறுதிசெய்வதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்.  இன்னார்தான் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் சுமார் 3.5 லட்சம் மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. ”100 ஆண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காக போடப்பட்ட விதை இன்று மரமாக வளர்ந்து உயர்ந்து நிற்கிறது” நமது திராவிட மாடல் அரசு அனைவருக்கும் உயர்க்கல்வி, ஆராய்ச்சி கல்வி என்கிற இலக்கோடு சமூகநீதி புரட்சியை கல்வித்துறையில் நடத்தி வருது.

தமிழ்நாட்டு மாணவர்களை படிப்பிலும் வாழ்க்கையிலும் வெற்றியாளர்களாக ஆக்க நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

கல்விக்காக திமுக ஆட்சி செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்துமே மாணவர்களை அடுத்தகட்ட புரட்சிக்கு முன்னேற்றும்.

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.

இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 15 தமிழ்நாட்டில் உள்ளன.

உயர் கல்வி மாணவர்களின் சிந்தனைக்கு ஊக்குமளிக்கும் வகையில் சி.எம். ஃபெல்லோஷிப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதையே, இன்று தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க காரணம்.

அனைத்து தரப்பை சேர்ந்த குழந்தைகளும் உயர்கல்வி படிக்க தேவையான உதவிகளை அரசு செய்கிறது.

திறனை மேம்படுத்தி 1.40 லட்சம் பேருக்கு ஓராண்டில் வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது,

இவ்வாறு  முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.