லன்டண்:
ங்கிலாந்தில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளென் பிலிப்ஸ்  ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்தவர், கிரிக்கெட் வீரர் கிளென் பிலிப்ஸ் (19). இவர் இங்கிலாந்தில் மெர்ல்ன்போர்ன் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடி ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசினார்.
download
வலது கை ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான கிளென் பிலிப்ஸ் , நோர்போல்ச் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 123 பந்தில் 201 ரன்களும் குவித்தார்.
சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக இவர் விளையாடினார். மேலும் ஆக்லாந்து அணிக்காக அவர் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.