சூப்பர் கிங்ஸ் சாதனையை சமன் செய்ய முடியாத ராயல் சேலஞ்சர்ஸ்

Must read

சென்னை:
பிஎல் வரலாற்றில் இறுதி போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடி கோப்பையை வென்ற அணி  என்ற சாதனையை நிகழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.  நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அந்த சாதனையை பங்கிட முயன்று தோற்றுப்போனது.
2011 ஐபிஎல் டி20 இறுதி போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் –  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  மோதின.   அந்த போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிவாகை சூடியது.
30-1464547034-csk-team24-600
இந்த சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று பங்கிட்டுக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பெங்களூர் அணி இன்று 8 ரன்கள் வித்தியாசத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.
இதனால் சென்னை சாதனையை சமன் செய்ய  பெங்களூரு அணியால் முடியவில்லை. ஆகவே சொந்த மைதானத்தில் வென்ற அணி என்ற பெருமையை சென்னை அணி மட்டுமே பெற்றிருக்கிறது.

More articles

Latest article