7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் – மகாராஷ்டிரா சுகாதாரத்துறை

Must read

மும்பை:
7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகில், தென்னாப்பிரிக்கா நாடுகளில் கடந்த மாதம் ஒமைக்ரான் புதிய வகை மாறுபாடுகள் கொண்ட தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் மராட்டியத்தில் முதல் முறையாக 7 பேர் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

புதிய வகை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம் சென்று திரும்பியவர்கள் என்றும், 3 பேர் கேரளா, கர்நாடகா பயணித்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

More articles

Latest article