மாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் ஹெலிகாப்டரில் டெலிவரி!

Must read

டில்லி,
புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ராணுவ ஹெலிக்காப்டரில் டெலிவரி செய்து வருகிறது மத்திய அரசு.
நாட்டில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதன் காரணமாக ராணுவ ஹெலிக்காப்டர் மூலம் பணத்தை மாநில தலைநகருக்கு டெலிவரி  செய்து வருவதாக மத்தியஅரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை கடந்த 8ந்தேதி இரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளின் முன் குவிந்தனர்.
ஆனால் மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் இல்லாமல் தட்டுப்பாடு அதிகரித்தது. புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு இதுவரை வரவில்லை. இதன் காரணமாக சில்லரைகளுக்காவும், டெபாசிட் செய்யவும்  வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 15 நாட்களாக இந்த நிலை நீடித்து வந்தது.
இதன் காரணமாக நாட்டில் நிலவும்  பணதட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு  தற்போது ஹெலிக்காப்டர் மூலம் பணத்தை டெலிவரி செய்து வருகிறது.
கடந்த 21ந்தேதி முதல் ரூபாய்  இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப்படும் இடத்தில் இருந்து வங்கிகளுக்குப் பணத்தைப் பிரித்துக் கொடுக்கப்படும் டிஸ்ட்ரிபியூஷன் சென்டருக்குப் பணத்தைக் கொண்டு செல்ல  குறைந்தது 21 நாட்கள் தேவைப்படும். ஆனால் தற்போது ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பணம்  6 நாட்களுக்குள் கொண்டு செல்லப்படுகிறது.
helicoptor1
இதன் காரணமாக பணத்தட்டுப்பாடு அடுத்த 5 நாட்களுக்குள் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்ர்டர் மூலம் பணம் டெலிவரியால், பெரு நகரங்களில் பணத் தட்டுப்பாடு ஓரளவு  குறைந்துள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
தற்போது மத்திய அரசு, கிராமம் மற்றும் சிறு நகரங்களுக்கு அதிகளவிலான பணத்தைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
நாட்டில் இந்த பணத்தட்டுப்பாடு மற்றும் தடையால் பொருளாதாரமும், வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 15ம் தேதிக்குப் பின் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கூறினார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article