டிவிட்டரில் புகைப்படங்கள் வீடியோ பதிவேற்றம் குறித்து புதிய விதிமுறைகள்

Must read

லிஃபோர்னியா

டிவிட்டரில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவேற்றம் செய்வது குறித்து புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைத் தளமான டிவிட்டர் சேவையை உலகெங்கும் கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.   இங்கு தகவல்கள் மட்டுமின்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் பகிரப்படுகின்றன.  தொடர்ந்து டிவிட்டர் நிறுவனம் தனது பயனாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அவ்வகையில் ஏற்கனவே பயனாளர்களின் தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   சமீபத்தில் டிவிட்டர் நிறுவன புதிய செயல் அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.   அவர் பதவி ஏற்ற அடுத்த தினமே பல புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளார்.

அதன்படி டிவிட்டரில் தனி நபர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் அனுமதி இன்றி பகிரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   அதாவது பொது நபர்களாக இல்லாதவர்கள் தங்கள் அனுமதி இன்று தங்கள் புகைப்படம், வீடியோக்கல் பகிரப்பட்டதாகப் புகார்கள் அளித்தால் அவை உடனடியாக நீக்கப்பட உள்ளன.

இந்த விதிமுறைகள் ஊடகங்கள் மற்றும் பொது நலனுக்காகப் பகிரப்படும் புகைப்படங்களுக்குப் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய விதிமுறைகள்மூலம் தனிநபர்கள் அச்சுறுத்தல், பெண்கள் மற்றும் சமூகத்துக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், தவறான வதந்திகள் ஆகியவை தடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article