ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள டோன்னர்ஸ்-பெர்கர்-புருக்கே ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அந்த இடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நடந்த முதல்கட்ட விசாரணையில், ரயில் நிலையத்திற்கு வெளியே நடைபெற்று வரும் கட்டுமானப் பணியின் போது பூமிக்கு அடியில் புதைந்திருந்த குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது வான்வழி தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் ஜெர்மனி முழுவதும் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக அவ்வப்போது கிடைத்து வருகிறது.

இந்நிலையில், டோன்னர்ஸ்-பெர்கர்-புருக்கே ரயில் நிலையத்தில் வெடித்ததும் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ரகத்தைச் சேர்ந்தது தான் என்று தெரியவந்திருக்கிறது.