டில்லி:
சினிமா பாணியில் டில்லியில் ஐபோன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசாரின் துரித நடவடிக்கையால் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
 1iphoneiphone
டெல்லியில் தெற்கு பகுதியில் உள்ள ஒக்லாவில் இருந்து  தென்மேற்கு நகரான டார்கா பாகுதிக்கு சுமார் ரூ. 2.25 கோடி மதிப்புள்ள 900 ஆயிரம் ஐபோன்களை ஏற்றிக்கொண்டு டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஆப்பிள் நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்ட ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல் போன்களை சுமந்து வந்த டிரக்கை தெற்கு டெல்லியில் ஒரு கும்பல் வழிமறித்து ஓட்டுனர் மீது மிளகாய்பொடியைத் தூவி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரக்கின் ஓட்டுநர் கலம் சிங் தெற்குடெல்லியின் வசந்த் குன்ச் பகுதியை அடைந்த போது  திடீரென்று டிரக்கினுள் ஒரு பிரிக்கபட்ட பாக்கெட்டுடன் மிளகாய்பொடி வந்து விழுந்திருக்கிறது. ஏதோ சிறுவர்கள் விளையாட்டு என்று நினைத்து அவர் கண்களைக் கழுவ இறங்கிய போது ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து டிரக்கினுள் தள்ளியது.
டிரக்கை சிறிதுதூரம் ஓட்டிச்சென்று டிரக்கினுள் இருந்த ஐபோனை இன்னொரு வேனுக்குள் மாற்றி வைத்தபின் ஓட்டுநர் கலம் சிங்கை ஒரு பாலத்தின் அருகே தள்ளிவிட்டு தப்பிவிட்டனர்.
கலம்சிங் அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார்.  விலையுர்ந்த செல்போன்கள் திருடப்பட்டது  டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறை விரைந்து செயல்பட்டு சிசிடிவி கேமராக்களை டிராக் செய்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தனர். இது தொடர்பாக  மேக்ப்தாப் அலம் (24) அர்மன் (22) என்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 900 ஐபோன்களும் மீட்கப்பட்டது.
மேலும் குற்ற சம்பவத்துக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொள்ளைக்கு மேலும் சிலர்  உடைந்தையாக இருந்தது விசாரணையில்  தெரியவந்தது.
கடந்த மாதம் பணி நீக்கம் செய்யப்பட்ட டிரக் டிரைவர்களான   போலா மற்றும் பிரதீப்  ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.