தாய்லாந்து சிறை: தாயகம் திரும்பிய 17 தமிழர்கள்! ஜெ.நடவடிக்கை!!

Must read

 
1jayalalit
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தாய்லாந்து சிறையில் இருந்த 17 பேர் சென்னை திரும்பினர்.
தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 17 பேர்  கடந்த 5 மாதத்துக்கு வேலைக்காக தாய்லாந்து நாடு சென்றனர்.
ஆனால்,  அவர்கள் வேலைக்கான விசா  இல்லாமல் சுற்றுலா விசாவில் அங்கு சென்றுள்ளனர். அவர்களின் விசா காலம் முடிவுற்றதும், தாய்லாந்து நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.  அவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதுகுறித்த தகவல்கள்  அவர்களின் பெற்றொருக்கு தெரிவிக்கப்பட்டன.  வேலை விசயமாக சென்ற தங்களது மகன் சிறையில் அடைக்கப்பட்டது குறித்தும், அவர்களை மீட்டு தரக்கோரியும்,  தமிழ்நாடு மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறையில் புகார் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.
இதையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா,  தமிழர்களை  மீட்க கோரி  இந்திய அரசின்  வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து மத்தியஅரசு, தாய்லாந்து தூதரகம்மூலம் தமிழர்களை மீட்க நடவடிககை எடுத்தது.  அவர்கள்  17 பேரையும் மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று  அனைவரும் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
 
 

More articles

Latest article