இந்தியாவின் புதிய ராணுவ தளவாட நடைமுறை முடிவு செய்யப்பட்டது

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

 
manoharparikar1
 
பாதுகாப்பு அமைச்சகத்தால் (MoD) புதிய ராணுவ தளவாடம் நடைமுறைக்கு (DPP) திங்கள் கிழமை அன்று இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டது. இதை அறிவித்த பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த புதிய வரைவு மார்ச் 28 முதல் ஆன்லைனில் கிடைக்குமென செய்தியாளர்களிடம் கூறினார் .இந்த முடிவு பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (DAC) அதாவது பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய கொள்முதலைப் பற்றி முடிவெடுக்கும் ஒரு உயர்ந்த அமைப்பினால் பாரிக்கர் தலைமையில் எடுக்கப்பட்டது.
“மொத்தமுள்ள ஏழு அதிகாரங்களில் ஆறு முடிவடைந்துவிட்டன. ராஜதந்திர கூட்டணி பற்றிய அத்தியாயம் 6 நன்றாக வெளிவந்துள்ளது மீதமுள்ள ஒரு  அத்தியாயம் இரண்டு மாதங்களில் முடிவடைந்துவிடும்,” என்று பாரிக்கர் கூறினார். “புதிய பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை இரண்டு பிரிவுகளுக்கு ஆதரவாக அமையும்- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு அபிவிருத்தி உற்பத்தி (IDDM) மற்றும் இந்தியாவிலேயே வாங்குவது செய்வதும்” என்றும் அவர் கூறினார்.
புதிய ஜனநாயக பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைக்கு பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சிலை (DAC) தேவையை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையைத் (AON) தவிர்த்து சிறப்பு படைகளின் தேவை போன்ற அவசர தேவைகளை அனுமதிக்கும் வசதி இருக்கும்.
DRDO
கருப்புப்பட்டியலைப் பற்றிய கொள்கை இன்னும் முடிவு செய்யப்படவில்லை ஆனால் அதற்கென ஒரு தனி ஆவணம் இருக்குமென பாரிக்கர் கூறினார். பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (DAC) ரூ 3.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏற்றுக்கொண்டுள்ளது.எனினும், கையகப்படுத்துதல் எதுவும் நல்ல முடிவினை தரவில்லை – இன்று வரை பல்வேறு கொள்முதல் பிரச்சினைகளில் தெளிவு இல்லாத காரணத்தால் எந்த திட்டங்களும் ஒப்பந்தமாக மாறவில்லை.
INDIA5
“உள்நாட்டு உற்பத்திக்காக ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளோம்” என்று பாரிக்கர் கூறினார்.

More articles

Latest article