RRB2
RRB TIPS
2016ஆம் ஆண்டுக்கான ரயில்வே பணியாளர் வாரியம் (ஆர்ஆர்பி) பரீட்சை நெருங்குகையில், மாணவர்கள் தங்களது இறுதிகட்ட தயாரிப்பில் நுழைந்துள்ளனர். மீதமுள்ள இந்த குறுகிய காலத்தை நன்கு பயன்படுத்தி அதிக கவனத்தையும் ஈடுபாட்டையும் செலுத்தி தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம்.
RRB1
 ஆர்ஆர்பி பரீட்சையின் கேள்விமாதிரி:
பரீட்சையில் நான்கு பகுதிகள் இருக்கும்: பொது விழிப்புணர்வு, எண்கணிதம், பொது உளவுத்துறை மற்றும் ரீசனிங்.
இது  90 நிமிடங்கள் கால அவகாசம் கொண்ட கணினி சார்ந்த 100 மார்க் பரீட்சை இருக்கும்.
தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் இருக்கும். ஒரு தவறான பதிலுக்கு, அந்த கேள்விக்கு ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
 RRB
பின்பற்ற வேண்டிய சில முக்கிய குறிப்புகள்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை கவனமாக பின்பற்றினால் நிச்சயமாக உங்கள் செயல்திறனை மேம்படுத்தவும் நல்ல மதிப்பெண்களை பெறவும் உதவியாக இருக்கும்.
கணித (குவான்டிடேடிவ் ஆப்டிடூட்) பிரிவிற்கு தொடர்பான சூத்திரங்கள் (ஃபார்முலா)மறுஆய்வு.
நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய 10 மிக முக்கியமான தலைப்புகள்:
(i) சதவீதங்கள்-பர்சென்டேஜஸ்
(ii) நேரம் மற்றும் வேலை-டைம்&வர்க்
(iii) நேரம்,வேகம் மற்றும் தூரம்-டைம்,ஸ்பீட்&டிஸ்டன்ஸ்
(iv) எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டி-சிம்பிள் &காம்பௌன்ட் இன்டரெஸ்ட்
(v) தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம்-டேடா அனாலிசிஸ்&இன்டர்ப்ரிடேஷன்
(vi) இலாபம் மற்றும் நட்டம்- (ப்ரோஃபிட்&லாஸ்)
(vii) விகிதம் மற்றும் விகிதாச்சாரங்கள்-ரேஷியோ&ப்ரோபோர்ஷன்ஸ் (Ratio and Proportions)
(viii) கலவை மற்றும் பலவினக் கூட்டல்- (மிக்ஷர்&அல்லிகேஷன்ஸ்)
(ix) சராசரி-(ஆவரேஜஸ்)
(x) வயது சார்ந்த கணக்குகள்(பிராப்ளம்ஸ் ஆன் ஏஜஸ்) .
கடந்த ஆறு மாதத்தில் வெளிவந்த குறிபிடத்தக்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை படிக்கவும். ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட் போன்ற நடப்பு ஆண்டின் நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
 
நுழைவுத் தேர்வுக்கு தயாராக உதவும் 10 முக்கிய குறிப்புகள்:
நீண்ட கணக்கீடுகளை எளிமைப்படுத்தும் குறுக்குவழிகளையும் தந்திரங்களையும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.
பொதுவான சதுரங்கள், க்யூப்ஸ், சதுர வேர்கள் மற்றும் கன வேர்களின் மதிப்புகளை மனப்பாடம் செய்வது பெரும் உதவியாக இருக்கும்.
கடந்த ஆண்டுகளின் சில கேள்வி தாள்களுக்கு விடை தெரிந்துகொள்ளுங்கள் அது உங்களுக்கு தேர்வு வினாக்கள் கேட்கப்படும் சிரம நிலையைப் பற்றி தெளிவு கொடுக்கும்.
நீங்கள் இறுதி பரீட்சைக்கு தோன்றும் முன் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு ஆன்லைன் தேர்வுகளை எழுதி பழகுங்கள். அதுவும் நீங்கள் இதற்குமுன் ஆன்லைன் திறனாய்வு தேர்வு எழுதியதில்லை என்றால் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
பொது நுண்ணறிவு மற்றும் காரண பகுதியின் தொடர்பாக பல கணக்குகளை பயிற்சி செய்யுங்கள்-அனாலோஜி&கிளாசிஃபிகேஷன்,டைரக்ஷன் டெஸ்ட்,சீரீஸ்,கோடிங்-டீகோடிங்,ப்ளட் ரிலேஷன்ஸ்&காலண்டர்.
செய்யக்கூடியதும்/ செய்யக்கூடாததும்
1) பரீட்சைக்கு முந்திய இரவு நன்கு தூங்கி காலையில் பொலிவுடன் இருங்கள் .
2) பரீட்சை நாளிற்கு முன், பரீட்சை மையத்தை ஒரு முறை சென்று பாருங்கள்.
3) பரீட்சை நாளில், நீங்கள் இருக்கும் இடத்தைவிட்டு சீக்கிரமாக கிளம்பி பரீட்சை மையத்திற்கு நேரத்திற்கு சென்றடையுங்கள்.
4) பரீட்சையில் யூகிக்காதீர்கள் ஏனெனில் நெகடிவ் மதிப்பெண்கள் மிகவும் அதிகமாக உள்ளது.
5) உங்கள் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் முழு முயற்சியையும் நம்பிக்கையயும் வைத்து படியுங்கள் வெற்றி உங்களைத்தேடி வருவது நிச்சயம். உறுதியான மனநிலை இருந்தால் கடினமான பணி கூட எளிதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.