election2016
mamtha cartoon2
மே 2014 இல் மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக பாஜக மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களைப் பெற்றதுடன் அதன் வாக்கு சதவீதமும் மும்மடங்காக  அதிகரித்து 17 சதவீதத்தை முதன்முறையாக அடைந்தது. தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்த இடது முன்னணியின் வாக்கு சதவிகிதத்தை ஒத்த இடத்தைப்  பெற்றது. பா.ஜ.க. பெற்ற வாக்கு சதவிகிதம் காங்கிரஸை விட அதிகமாக இருந்ததால் இந்தச் சாதனை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 24 சட்டசபை தொகுதிகளில் முன்னணியில் இருந்தது, கடந்த சட்டசபை தேர்தலில்  கணக்கு துவக்க தவறிய பா.ஜ.க.விற்கு அனுகூலமான செய்தியாகும்.
mamtha1
தேசிய அளவில், 2016 தேர்தலில் தொடர்ந்து இடதுசாரிகள் சந்தித்து வரும் சரிவு , மாநிலத்தேர்தல்களில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த இரண்டாவது பிரதான சக்தியாக உருவெடுக்க முடியும் என்று பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய முகங்கள் இல்லாத இடது முன்னணி மற்றும் மோடிக் காரணி ஆகியவை பா ஜ விற்கு சிறந்த பலனைத் தந்தது (CSDS கணக்கெடுப்பில் பிரதமர் பதவிக்கு 20 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாகவும் 17 சதவிகிதம் பேர் மம்தாவிற்கும் ஆதரவு தெரிவித்தனர்).
rahul-modi_660_111813063721_120513120631
பாஜக உயர் சாதி வாக்காளர்கள் மத்தியில் அதிகமாக செல்வாக்கு செலுத்தியது. மேலும், இளைஞர்கள், அதிமுக்கியமாக முதன் முறையாக வாக்களித்த மற்றும் பட்டதாரிகள் மத்தியில் மோடியின் தாக்கம், வெகுவாக இருந்தது. இடது முன்னணியின் விட, பா.ஜ., வின் வாக்கு, உயர் சாதி மற்றும் பட்டதாரிகள் மத்தியில் அதிகமாக இருந்தது.
மேலும், செப்டெம்பர்-2014ல் சட்டமன்ற இடைத்தேர்தலில், முதல் எம்.எல்.ஏ. வைப் பெற்றது பா.ஜ.க.
எனவே, மம்தாவும் சரி, காங்கிரஸ்-இடதுசாரி மெகாகூட்டணியும் சரி, பா.ஜ.க  தங்கள் வாக்கினை பிரித்து விடக் கூடாதென பதற்றமடைந்துள்ளன. 
வரவிருக்கும்  மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை பாதிக்கும் 8 காரணிகள்:

1.     நகராட்சி தேர்தலில்  சோபிக்கத் தவறியது.
2.    மாநிலத்தில் கட்சி அமைப்பு பலம் இல்லாமை
3.    வலுவான உள்ளூர்த்  தலைமை   இல்லாமை
 4.நகர்ப்புற மற்றும் கல்வி பயின்றவர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமை. 
 5. இடதுசாரிகளின் உழைப்பால், மாநிலத்தில் சாதி அடிப்படையிலான அரசியல்  இல்லாதது.
 6. 2014க்கு பிறகு மற்ற மாநிலத் தேர்தல்களில் வாக்குகள் இழந்தது
7. இந்திபேசும் கட்சி எனும் இமேஜ்
8. இடதுசாரி-காங்கிரஸ் மாபெரும் கூட்டணி

எனவே பா.ஜ.க. மூன்றாம் இடத்தைப் பிடிக்கவே கடுமையாகப் போராடும் என்பதே நமது ” நியூஸ் பாண்ட்” தரும்  கூடுதல் தகவல்.
கட்டுரை நீளும்….