நமது அண்டை நாடான நேபாளுக்கு ரயில் இணைப்பு உருவாக்க  சீனா திட்டமிட்டுள்ளது. இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சீனாவின் ஒத்துழைப்பு, உறுதிப்பாடு, நிதித்கொள்கை மற்றும் தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கிற வேட்கை , வலிமைமிக்க இமயமலையை அசைக்க முடியாதெனும் கருத்தை நீர்த்துபோகச் செய்துள்ளது.
Nepal's Prime Minister Khadga Prasad Sharma Oli and China's Premier Li Keqiang review honour guards during a welcoming ceremony at the Great Hall of the People in Beijing
இந்த ஒப்பந்தம், இந்தியாவிற்கு ஒரு அபாய எச்சரிக்கைமணி யாகும்.
எப்படியெனில், ஒருக்காலத்தில், நேபாளத்தில், தன் ஆதிக்கத்தின் மூலம் பினாமி ஆட்சி நடத்திய இந்தியா, அங்கு நிலவும் அசாதாரணச் சூழ்நிலைகலை தொடர்ந்து முறைகேடாகக் இந்தியா பயன்படுத்தி வந்ததையடுத்து,  கொஞ்சம் கொஞ்சமாக நம்மைவிட்டு விலகி இமயமலைக்கு அப்பால் உள்ள தன் அண்டை நாடான, சக்திவாய்ந்த சீனாவுடன் தஞ்சம்புக வைத்தது என்றால் அது மிகையில்லை.
உதாரணத்திற்கு, நேபாள நிலநடுக்க சம்பவத்தை இந்திய அர்சும், இந்திய ஊடங்கங்களும் கையாண்ட விதம், நேபாள மக்களையும் அரசையும் சினம் கொள்ளச் செய்த்து.  நேபாள பிரதமர், இந்தியப் பயணத்தை தவிர்த்துவிட்டு, சீனாவிற்கு சென்று தற்பொழுது கையெழுத்திட்டுள்ள இந்த இரயில் இணைப்பு ஒப்பந்தம், இந்தியாவிற்கு ஒரு வலுவான எச்சரிக்கைச் செய்தியை தந்துள்ளது.
தனக்கு எது நல்லது என்றுப் படுகின்றதோ அதைச் செய்ய நேபாளுக்கு முழு உரிமையுண்டு என்பதை மறுப்பதற்கில்லையென்றாலும் இந்தியாவிற்கு வேதனையளிக்கும் விஷயம் யாதெனில்,  நேபாள நாட்டின் நிலைமையை எப்படி நரேந்திர மோடியின் அரசு மிகமோசமாக கையாண்டது எனும் உண்மையாகும்.
குறிப்பாக, நரேந்திர மோடி நேபாளுக்கு பலமுறை பயணங்கள் செய்து, நேபாள பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சாதாரண மனிதனர்களுக்கு இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட செய்யப்படவேண்டியவை குறித்து ஒரு நேர்மையான ஆய்வுரையில் வாக்களித்தார்.
புத்தர் பற்றி பேசும் போது அவர் காட்டிய பரிவு, நேபாள மக்களின் மனதைத் தொடத் தவறவில்லை. உலகமே புத்த பூமி என்று இந்தியாவைக் குறிப்பிடுகையில், மோடி தம்முடைய உரையில், மீண்டும் மீண்டும் புத்தர் பிறந்த இடம் நேபாளம் தான் என  ஆணித்தரமாக  பேசியது மக்களைத் திருப்திக்கொள்ளச் செய்தது என்பது கண்கூடு. .
இவ்வளவுக்குப் பின், எவ்வளவு மோசமான குழம்பங்களை மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது என்பதுக் குறித்து சில நேர்மையான ஆய்வை செய்யவேண்டியிருந்தாலும், சில விஷயங்கள் சோற்றில் மறைத்த பூசனியாய் வெளியே தெரிகின்றது.
மிகவும் பொதுவாக, எடுத்துக்காட்டாக, அடிக்கடி நேபாள் நாட்டின் வளர்ச்சிக்கு மற்றும் அம்மக்களுக்கு உதவியாக இந்திய அரசாங்கம் வழங்கிய மானியங்களில் ஒரு பெரும்பங்கினை அங்கு ஆட்சிசெய்யும் அதிகாரிகளே களவாடி விடுவதால் அம்மக்களுக்கு இந்தியாவின் உதவி சென்றுச்சேர்வதில் சிக்கல் உள்ளது. அதேவேளையில், உதவி செய்வதில் சீனா தன்னை வேகமாக முன்னேற்றிக்கொண்டு, நேபாள மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது.
இந்தியாவின் வாக்குறுதிகளுக்கும், செயல்பாடுகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியுள்ளது. மேலும் நமது வெளியுறவுக் கொள்கைகளும் குருகியக்கால நோக்கமுடையவையாகவே உள்ளது.  ஆனால் சீனாவோ, திட்டங்கள் தீட்டுவதில் ஒரு நீண்டகால குறிக்கோள்களையும் அதனைச் செய்துமுடிப்பதில் அதிவேகத்தையும் காட்டிவருகின்றது. சீனாவின் அண்டைநாட்டுடனான உறவுகளிலும் அதே உத்வேகம் பிரதிபலிப்பதில் வியப்பில்லை.
உதாரணத்திற்கு, ரயில் இணைப்பு ஒப்பந்தத்தையே கவனியுங்கள்.
china-modi2
பத்தாண்டுகளுக்கு முன்னரே, சீன- திபெத் தங்கள் நிலப்பகுதியில் இருந்து அதிநவீன ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. அதேபோன்று தற்பொழுது  நேபாள மக்களுக்கும் சீனா வாக்குறுதியளித்துள்ளது. நேபாளத்தின் கோதாரி, இமாலயத்தின் நியாளம் (Nyalam)  மற்றும் சீனாவின் ஷாங்மு (Zhamgmu) வையும் உள்ளடக்கிய இரயில் இணைப்பாகவும், தங்கள் எல்லைவரை இந்த இணைப்பினை வழங்க உறுதியளித்துள்ளது.
சீனாவின் அகராதியில் “செய்யமுடியாதது” எனும் சொல்லே இல்லை எனலாம்.
நமது ரயில்வேயின் சாதனைகளை சீனாவுடன் ஒப்பிடுகையில், சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்குபின்,  நாம் சமீபத்தில் தான் ரயில் இணைப்பை ஜம்முவில் இருந்து காத்ரா(Katra) வரை நீட்டித்துள்ளோம். சண்டிகரில் இருந்து சிம்லாவிற்கு இன்றும் ஆங்கிலேயர் அமைத்துக் கொடுத்த குறுகிய ரயில் பாதையே நம்பி உள்ளோம்.  நாம் இன்னும் ஸ்ரீநகர் – ஜம்முவ இடையே நேரடி ரயில் இணைப்பைப் பெறவில்லை என்பதில் பல்லிளிகின்றது நமது சாதனை.
தங்களால் வேறுபாட்டினை அறிந்துகொள்ள முடிகின்றதா?
இந்தியாவிற்கும் சீனவிற்க்கும் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதலில் உள்ள வேறுபாட்டின் அளவினை அறிந்துக்கொள்ள முடிகின்றதா?
சீனாவுடன் மல்லுக்கட்ட நம்மால் கனவு காண முடியுமா? தற்போதைக்கு, நம்மிடம் உள்ள பதில், “இல்லை” என்பதுதான்.
அண்டைநாடுகளை கையாளும் யுக்திகளை சிறப்பாக்கிக் கொள்ள, நாம் நமது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லையெனில்,   “முடியாது” எனும் பதில் “முடியும்” என  மாறுவதற்கான  வாய்ப்பு எதிர்காலத்திலும் இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை ஆகும்.